பொது செய்தி

இந்தியா

பண்ணைப்பள்ளியில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement
 பண்ணைப்பள்ளியில் பொங்கல் விழா

நெட்டப்பாக்கம்:ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்த மணிலா பண்ணைப்பள்ளி நிகழ்ச்சியில் விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
கரியமாணிக்கம் உழவர் உதவியகம் சார்பில் வேர்க்கடலை சாகுபடியில் பண்ணைப்பள்ளி நிகழ்ச்சி ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் தொழில் நுட்ப வல்லுனர் ரவி, இலைவழி ஊட்டம் அளிப்பது குறித்தும், எளிமையாக தழைகளை மக்க வைக்கும் தொழில் நுட்பம் குறித்து விளக்கினார்.தொடர்ந்து விவசாயிகளுக்கு வேர்க்கடலை சாகுபடியில் பூ பூக்கும் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பண்டசோழநல்லுார், நெட்டப்பாக்கம், சூரமங்கலம், ஏரிப்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.ஏற்பாடுகளை உழவர் களப்பணியார்கள் கோபால், முருகையன், சண்முகம், பன்னீர், லட்சுமிநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X