பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் 

Added : ஜன 15, 2020
Advertisement
 பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் 

கோவை பள்ளிகளில் புதுப்பானையில் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி, பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் பொங்கல் விழா



சிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோட்டில் உள்ள, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மைதானத்தில், மாணவ, மாணவியர் பொங்கல் வைத்தனர். பாரம்பரியம் பேசும் உறியடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மணிமேகலை பேசுகையில், ''துாய்மை இந்தியா திட்டத்தில், மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. அனைவரும் பாராட்டும் வகையிலும், உழவரின் பெருமையை உணர்ந்தும், செயல்பட வேண்டும்,'' என்றார்.


ஏ.பி.சி., பள்ளியில் பொங்கல் விழா



காலை 9:00 மணியளவில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து, பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என, குரல் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர். பின், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் சந்திரகாந்தி, முதல்வர் ராமதாஸ், செயலர் விஜயகுமார், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், சிலம்பாட்டம், பறை, கும்மிப்பாட்டுடன் பொங்கல் பண்டிகை விழா நடந்தது.

போடிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

திருமலையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கயிறு இழுத்தல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தி, பொங்கல் வைக்கப்பட்டது.

ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில், பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், அனுப்பியுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், 'சுற்றுச்சூழலை காக்கும் வகையில் புகையில்லா போகியை கொண்டாடுவோம். நேர்மறையான செயல்திட்டத்துடன் தலைமை பண்புள்ள மாணவர்களை உருவாக்குவோம்; பொதுத்தேர்வில் மாநில அளவில் முன்னிலை பெறுவதற்கு, பாடுபடுவோம்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X