பைக்குகள் மீது கார் மோதல் இரு வாலிபர்கள் படுகாயம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement
பாகூர்:அடுத்தடுத்து இரு பைக்குகள் மீது கார் மோதியதில் இரு வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்தவர் வினோத் ஆரோக்கியராஜ் 25; இவர் நேற்று முன்தினம் இரவு பி.ஒய். 01 வி 3279 பதிவெண் கொண்ட பைக்கில் தவளக்குப்பம் - பூரணாங்குப்பம் சாலை சந்திப்பு பகுதி அருகே சென்றபோது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற டி.என். 69 பிடி 9805 பதிவெண் கொண்ட வோல்ஸ்வேகன் கார்

பாகூர்:அடுத்தடுத்து இரு பைக்குகள் மீது கார் மோதியதில் இரு வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்தவர் வினோத் ஆரோக்கியராஜ் 25; இவர் நேற்று முன்தினம் இரவு பி.ஒய். 01 வி 3279 பதிவெண் கொண்ட பைக்கில் தவளக்குப்பம் - பூரணாங்குப்பம் சாலை சந்திப்பு பகுதி அருகே சென்றபோது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற டி.என். 69 பிடி 9805 பதிவெண் கொண்ட வோல்ஸ்வேகன் கார் மோதியது.அதில், வினோத் ஆரோக்கியராஜ் படுகாயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதால், அங்கிருந்த பொது மக்கள் காரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், கார் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றபோது, முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது மோதியது.
அதில், நயினார் மண்டபம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்த ராஜசேகர் படுகாயமடைந்தார்.உடன் கார் டிரைவர், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று, முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
விபத்தில் காயமடைந்த வினோத் ஆரோக்கியராஜ், ராஜசேகர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த துாத்துக்குடியை சேர்ந்த டாக்டர் கிளிண்டர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X