பைக் மீது ஆட்டோ மோதல் தொழிலாளி படுகாயம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

பாகூர்:பைக்கில் சென்ற தொழிலாளி ஆட்டோ மோதி படுகாயமடைந்தார்.
குருவிநத்தம், பிடாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜசேகரன்,28; கன்னியக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் கடந்த 12ம் தேதி இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.பாகூர் துாக்குபாலம் சந்திப்பு அருகே சென்ற போது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. அதில் படுகாயமடைந்த ராஜசேகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X