ஆஸ்துமாவால் அவதி மூதாட்டி தற்கொலை

Added : ஜன 15, 2020
Advertisement

வில்லியனுார்:ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட மூதாட்டி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏம்பலம் தேசமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி பவுனாம்பாள்,67; மகன் ஆறுமுகம் வீட்டில் வசித்து வந்தார். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் குளிர் காரணமாக பவுனாம்பாள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார்.
அதில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு 11: 00 மணியளவில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார்.அதிகாலை 4:00 மணியளவில் வாந்தி எடுத்துள்ளார். உடன் அவரை, அவரது மகன் ஆறுமுகம் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X