பொது செய்தி

இந்தியா

வேதபாரதி சார்பில் மார்கழி பஜனை ஊர்வலம்

Added : ஜன 15, 2020
Advertisement
 வேதபாரதி சார்பில் மார்கழி பஜனை ஊர்வலம்

புதுச்சேரி:வேதபாரதி அமைப்பு சார்பில், புதுச்சேரியில் நடந்த மார்கழி பஜனை ஊர்வலத்தில், மாணவ மாணவியர் திருப்பாவை பாடல்கள் பாடியும், கும்மியடித்தும் உற்சாகமாகபங்கேற்றனர்.
புதுச்சேரி வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில், மார்கழி மாதத்தில் புதுச்சேரி நகரின் பல பகுதிகளில் நாள்தோறும் பாகவத சிரோன்மணிகளின் மார்கழி பஜனை உற்சவத்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்கழி முதல் தேதி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆரம்பமான பஜனை நகர பகுதி மட்டுமல்லாமல் வில்லியனூர், பாகூர், சூரமங்கலம், கனகசெட்டிகுளம் என புற நகர், கிராம பகுதிகளிலும் நாள்தோறும் பஜனை உற்சவம் நடந்தது.புதுச்சேரியில் நேற்று காலை வரதராஜபெருமாள் கோவிலிலிருந்து சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாடிக்கொண்டும், கோலாட்டம், கும்மியாட்டம் ஆடிக்கொண்டும் காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அண்ணா சாலை, பட்டேல் சாலை, மீண்டும் காந்தி வீதி வழியாக வேதபுரீஸ்வரர் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.
இவர்களுடன் ஜெயஸ்ரீ நாராயணனின் சலங்கை கல்சுரல் அகாடமி மாணவியர் கும்மியாட்டம், பரதநாட்டியம் ஆடிக்கொண்டு வந்தனர்.அவர்களை தொடர்ந்து கலால்துறை பாலு, வி.சி.ஆர்.சி. பாலு, வைத்திகுப்பம் சத்யா மற்றும் வேதபாரதி பாகவதர்கள் பஜனை பாடல்களை பாடிக் கொண்டு வந்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர், பஜனை குழுவினரை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், சங்கர் ஆகியோர் வாழ்த்தி சால்வை அணிவித்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் பட்டாபிராமன், சந்திரசேகரன் மற்றும் வேதபாரதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X