தமிழ்நாடு

இன்று தைப்பொங்கல்... மகிழ்ச்சி பொங்குது!: மக்கள் மத்தியில் உற்சாகம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
  இன்று தைப்பொங்கல்... மகிழ்ச்சி பொங்குது!: மக்கள் மத்தியில் உற்சாகம்

திருப்பூர்:தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, திருப்பூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அறுவடை திருநாளை கொண்டாட, ஒட்டுமொத்த தமிழர் குடும்பங்களும் தயாராகிவிட்டது.

துாங்கா நகரம், உழைப்பாளி நகரம் என்ற வகையில், திருப்பூரை தோள்களில் உயர்த்திய தொழிலாளர்கள், சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட, பொங்கும் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றுவிட்டனர். உலக உயிர்களை காக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தை மகளை வரவேற்கும் வகையில், பூளைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை கொண்டு, வீடுகளில் காப்பு கட்டினர். இன்று, காலை, புதுப்பானையில் மஞ்சள் செடியை கட்டி, புத்தரிசியான பச்சரிசியில் பொங்கல் ைவத்து, வரும் ஆண்டு வளமாக இருக்க வழிபட உள்ளனர்.வெல்லம், முந்திரி, திராட்சையுடன், நெய் சேர்த்து பொங்கல் வைத்து, அரிசி முறுக்கு, அதிரசம், பொரி கடலை, கரும்பு ஆகியவற்றை, வாசலில் படைத்து, சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு பிறகு, குமரிகளையும், கிழவிகளையும் கூட குழந்தைகளாக மாற்றும் விளையாட்டு போட்டிகளுக்கும் பஞ்சமிருக்காது. கலை நிகழ்ச்சிகளால், நகர்ப்புறமும், கிராமங்களும் களைகட்டியுள்ளது.

வீதியெங்கும் தோரணம், 'மைக் செட்', ஆரவாரம் என, உற்சாகம் பொங்க, திருப்பூர் நகர வீதிகளெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளன. இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, விவசாயத்துக்கு உதவியாக இருக்கும், கால்நடைகளை கொண்டாடும், மாட்டுப்பொங்கல் நாளை நடக்கிறது.பசுமாடுகள், கன்றுகள், காளை மாடுகளை கழுவி, கொம்புகளுக்கு வண்ணம்பூசி, புதிய கயிறு மற்றும் மணிகள் மாற்றி, மரியாதை செலுத்துகின்றனர்.

சூரியனை வழிபட்டது போலவே, பசுமாடுகளை அலங்கரித்து, கரும்பு, பொங்கல் படைத்து இன்று விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் நன்றி செலுத்துகின்றனர்.'பட்டி பெருக... பால் பெருக!' என, கால்நடைகளை தெய்வமாக வழிபடவும் விவசாயிகள் தயாராகிவிட்டனர். நாளை மறுநாள், காணும் பொங்கல் என்பது, ஆறு, குளம், குட்டைகள் என, பொதுவான இடங்களில் கூடி, கும்மியடித்து விளையாடி, உணவு பண்டங்களை சாப்பிட்டு குதுாகலிப்புடன் கொண்டாட உள்ளனர்.

தமிழர்களுக்கான தனித்துவம் மிகுந்த தை பொங்கல் பண்டிகையை, பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டாடி, இளம்தலைமுறையினரிடம், இப்பண்டிகையின் பெருமையை, தித்திக்கும் கரும்பு, பொங்கலுடன் கொண்டாடுவோம்.


1.50 லட்சம் பேர் பயணம்



புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனிக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. வந்த பஸ்களில் பயணிகள் ஓடோடி சென்று இடம் பிடிக்க முட்டிமோதினர். ஒவ்வொரு வழித்தடத்துக்கும் தனித் தனியே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்த போதும், போலீசார் ஒழுங்குபடுத்த தவறியதால், பெண்கள், குழந்தைகள் பஸ் ஏற முடியாமல் தள்ளுமுள்ளுவில் சிக்கி தவித்தனர்.போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் (வணிகம்) முத்துகிருஷ்ணன் கூறுகையில், 'நான்கு நாட்களில், 1.50 லட்சம் பேர் பஸ்களில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X