பொது செய்தி

இந்தியா

புதுச்சேரிக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் மத்திய அரசிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

Added : ஜன 15, 2020
Advertisement
 புதுச்சேரிக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் மத்திய அரசிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி:புதுச்சேரி அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அளித்த மனு விபரம்:புதுச்சேரி மாநிலம் சீரான வளர்ச்சி பெறவும், பல்வேறு நலத்திட்டங்களை தடையின்றி நிறைவேற்றிடவும் , வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், மாநில வருவாய் பெருக்கவும் மாநில அந்தஸ்து அவசியமாகிறது. இதுகுறித்து புதுச்சேரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.2007ம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரிக்கென தனிக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மேலும் பழைய நிலுவைக்கடனாக ரூ. 2177 கோடியை திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 1279கோடி அசல் மற்றும் வட்டியாக புதுச்சேரி அரசால் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. . எனவே, கடனை தள்ளுபடி செய்வதுடன், இதுவரை திருப்பி செலுத்தப்பட்ட தொகையை திருப்பி தர வேண்டும். புதுச்சேரி மாநிலத்தை, 15வது நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்.புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைதொகையை மத்திய அரசு வழங்க வேண்டும், டில்லியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வு கால பணபலன்களையும் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவையும் மத்திய அரசே ஏற்பதுபோல் புதுச்சேரி அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
2019-20ம் நிதியாண்டில் இதற்கென தேவைப்படும் ரூ. 760 கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும். புதுச்சேரி அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு மத்திய நிதி ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்.புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டடம் கட்டவும், உலகத்தரம் வாய்ந்த கன்வென்ஷன் சென்டர் கட்டவும் ரூ. 1000 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும்.மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியுதவி தொகையை மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுபோல் 60-40 என்ற வீதத்தில் வழங்காமல் நிதி ஆயோக் பரிந்துரைபடி யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X