பொது செய்தி

தமிழ்நாடு

'ஹலோ, பொங்கல் பரிசு ரெடி!' மொபைல் போனில் அழைப்பு

Added : ஜன 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், விடுபட்ட கார்டுதாரர்களை 'மொபைல்' போனில் அழைத்து, பொங்கல் பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பொங்கல் பரிசுடன், 1000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்குவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று, பரிசு தொகுப்பை பெற்றனர். 'என்' கார்டு மற்றும் சர்க்கரை ரேஷன் கார்டுகள் நீங்கலாக, மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த, 9ம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலமாக, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப் பட்டு உள்ளது. விடுபட்டவர்கள், பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ள, 21ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு பெறாத கார்டுதாரர்களை, மொபைல் போன் மூலம் அழைத்து, பரிசு வழங்கி முடிக்க, வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறுகையில், ''இன்றைய (நேற்று) நிலவரப்படி, 97 சதவீதம் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுள்ளனர். விடுபட்ட கார்டுதாரர்களுக்கு, மொபைல் போன் மூலம், பொங்கல் பரிசு வாங்க வருமாறு, அழைப்பு விடுத்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X