சிறையில் உள்ள ரவுடி சோழனை கொலை செய்ய திட்டம்: 7 பேர் கைது

Added : ஜன 15, 2020
Advertisement
 சிறையில் உள்ள ரவுடி சோழனை கொலை செய்ய திட்டம்: 7 பேர் கைது

புதுச்சேரி:லாஸ்பேட்டையில் ரவுடி சோழனை கொலை செய்ய திட்டமிட்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட், ஏர்போர்ட் பின்புறம் சிலர் கூடியுள்ளதாக வந்த தகவலின் பேரில் லாஸ்பேட் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களில் 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.பிடிபட்டவர்களை விசாரணை செய்ததில், லாஸ்பேட்டை நெருப்பு குழி, மாரியம்மன் கோவில் வீதி நிரஞ்சன்,21; மடுவுபேட், மாரியம்மன் கோவில் வீதி வெங்கடேஷ்,21; கோரிமேடு, காமராஜ் நகர், கம்பன் வீதி சூர்யமூர்த்தி,21; மரக்காணம் கீழ்புத்துப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதி சிவா (எ) சிவராஜ்,39; லாஸ்பேட்டை, லட்சுமி நகர், குமரன் வீதி கார்த்தி,24; லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு ஹேமச்சந்திரன்,24; சாந்தி நகர், கல்லுாரி சாலை, இருசப்பன்,21; என்பதும், ரவுடி அன்பு ரஜினி கொலைக்கு பழி தீர்ப்பதற்காக, சிறையில் உள்ள ரவுடி சோழன் வரும் 22ம் தேதி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்து வரும் போது கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.
அதன்பேரில், பிடிபட்ட ஏழு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ரவுடி அன்புரஜினியின் சகோதரர் ஜெரிக்கோ மற்றும் லாஸ்பேட்டை உதயக்குமார் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X