'இப்படியிருந்தா... எப்படீங்க!' வியாபாரிகள் கேள்வி

Added : ஜன 15, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் பி.என்.ரோடு பிச்சம்பாளையம் பகுதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இதன், முதல் தளத்தில் உள்ள 30 கடைகள் வாடகைக்கு விடப்படும்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், விவரங்களை மாநகராட்சி மைய அலுவலகம், வருவாய் பிரிவு; புது பஸ் ஸ்டாண்ட் பகுதி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம், பிச்சம்பாளையம் புதுார் மண்டல அலுவலகம் ஆகியவற்றில் பெறலாம். அல்லது, அலுவலகத்தை 2240153, 2240852 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் தளத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் காலியாகவே உள்ளன. தரை தளத்தில் மூன்று பகுதிகளிலும் அனைத்து கடைகளும் இயங்கி வருகின்றன. முதல் தளம் என்பதால் கடைகள் அமைப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.இவற்றில் வர்த்தக ரீதியான அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள், ஏஜன்சிகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தலாம்.க்ஷ

ஆனால், இந்த வளாகத்துக்கு வரும் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதியில்லை என்பதால், பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.முதல் தளத்தில் உரிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வியாபாரிகள் இங்கு கடை, அலுவலகம் துவக்க முன் வருவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X