பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி சார்பில் மரக்கன்று நடும் விழா

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 இந்து முன்னணி சார்பில் மரக்கன்று நடும் விழா

பல்லடம்:இந்து இளைஞர் முன்னணி சார்பில், விவேகானந்தரின் 157வது பிறந்த நாள் விழா, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட பொருளாளர்கள் ஹரிஹரன், கவியரசு மற்றும் லோகேஷ், பள்ளி தலைமையாசிரியர் நாட்ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப் பட்டன. தொடர்ந்து, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் கொடியேற்று விழா நடந்தது. விழாவில், டி.எஸ்.பி., முருகவேல், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், இந்து இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X