சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் சுற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ.,விடம் மனு

Added : ஜன 15, 2020
Advertisement

திருப்பூர்:கோவில் சுற்றுப்பகுதி நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என. கெங்கநாயக்கன்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் கூறியிருப்ப தாவது; திருப்பூர், கெங்கநாயக்கன்பாளையத்தில் அனுமந்தராய கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின்போது, சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அதிகளவில் வருகை புரிவர். கோவிலை சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பு, சர்வே எண், 344/1 ல், அமைந்துள்ளது.

கோவில் அமைந்துள்ள இடமும், இதே சர்வே எண்ணில் உள்ளது. தற்போது, கோவிலை சுற்றியுள்ள நிலப்பரப்பை, சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆளும் கட்சியினர் பெயரை குறிப்பிட்டு, அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது.இதனால், எதிர்வரும் நாட்களில், ஆகமவிதிப்படி, பூஜைகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, கோவில் சுற்றுப்பகுதி பகுதியில் எந்தவொரு ஆக்கிரமிப்பும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X