பொது செய்தி

இந்தியா

உழவர் சந்தைகள் மக்கள் கூட்டத்தால் 'களை' கட்டியது

Added : ஜன 15, 2020
Advertisement
 உழவர் சந்தைகள் மக்கள் கூட்டத்தால் 'களை' கட்டியது

புதுச்சேரி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், காய்கறிகள் வாங்க, புதுச்சேரி உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகர பகுதியில் பழைய பஸ் நிலையம், லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு, விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இதனால், காய்கறிகள், கீரைகள், பழங்கள் 'பிரஷ்' ஆகவும், விலை குறைவாகவும் கிடைக்கிறது. இதனால், உழவர் சந்தைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.பொங்கல் பண்டிகையொட்டி, பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர் சந்தையில் கரும்பு, சிறுவள்ளிக்கிழங்கு, பூசணி, வாழை இலை, வாழைப்பழம், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. நேற்று காலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் உழவர் சந்தை களை கட்டியது.இங்கு மஞ்சள் கொத்து அதிக பட்சமாக ரூ. 20 வரையும், கரும்பு ஜோடி ரூ. 50 வரையிலும், பூசணி கிலோ ரூ. 20க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலை மட்டும் குறையாமல் இருந்தது.
மக்கள் கூட்டம் அதிகரித்ததால், வழக்கமாக விற்பனையாகும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை விட 5 மடங்கு அதிகமாக விற்பனை நடந்தது. அதே போன்று, லாஸ்பேட்டை உழவர் சந்தையிலும் விற்பனை விறு விறுப்பாக நடந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது.நகர வீதியிலும் கூட்டம்:புதுச்சேரி பாரதி வீதியில் கரும்பு, மஞ்சள்,உள்ளிட்ட பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கொசக்கடை வீதியில் மண் பானைகள் விற்பனை அமோசமாக நடந்தது. பானைகள் ரூ. 50 முதல் ரூ. 300 வரையில் விற்பனை செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X