பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டோரம் பார்க்கிங் கட்டணம் வசூல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Added : ஜன 15, 2020
Advertisement

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட் டணம் வசூலிக்கப்படும் விவகாரத்தில், பேரூராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தி யுள்ளது.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை கோவிலுக்கு உட்புறமும், வெளிப்புற கோவிலை ஒட்டிய ரோட்டோரம் நிறுத்துவது வழக்கம். வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை, குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.

'குத்தகைதாரர், ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது,' என, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன், பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர், கோவில் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகள், கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமை மூன்று ஆண்டு குத்தகை அடிப்படையில், சுப்ரமணியம் என்பவருக்கு வழங்கப்பட்டு, அவர் சுங்கம் வசூலித்து வருகிறார்.

அவிநாசி தெற்கு ரத வீதி, கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் சுங்கம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டுள்ள சாலையோர கடைகள் மற்றும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X