பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி சிறுவனுக்கு குடியரசு தலைவர் விருது

Added : ஜன 15, 2020
Advertisement
 புதுச்சேரி சிறுவனுக்கு குடியரசு தலைவர் விருது

புதுச்சேரி:புதுச்சேரியை சேர்ந்த மாற்று திறனாளி சிறுவன், தேசிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் வெங்கடசுப்பரமணியன், 16; மாற்றுத்திறனாளியான இவர் ஜிப்மரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். படிப்பு, இசை, காரத்தே, சமுகப்பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப்பணி, பிறமொழி கற்றல் போன்ற துறைகளில் சாதித்துள்ளார்.இவர் சர்வதேச அளவில் அரியனா மாநிலத்தில் நடந்த இளைஞர் விழா மற்றும் கலைவிழாவில் பங்கேற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த காந்திய அமைதி முகாமில் இளம் வயதிலியே பங்கேற்றவர். மாநில அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றவர்.
இவரது சாதனையை பாராட்டி புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை சிறப்பு ஊக்க விருதினை வழங்கியுள்ளது. சர்வதேச அளவிலான அபாகஸில் தங்கப்பதக்கம் வென்றவர். சிறுவர் கலைச்சிகரம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரை இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை தேசிய குழந்தை விருதுக்கு தேர்வு செய்துள்ளது.வரும் 22ம் தேதி, டில்லியில் உள்ள ஜானதிபதி மாளிகையில் இவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருதினை வழங்க உள்ளார். தொடர்ந்து வரும் 26ம் தேதி டில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X