பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா இங்கிருக்கு... நிலம் எங்கிருக்கு? வருவாய்த்துறை சொதப்பல்; மக்கள் அவதி

Added : ஜன 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:காங்கயம் தாலுகாவில், வீட்டுமனை பட்டா வழங்கி மூன்று ஆண்டாகியும், இதுவரை மனை ஒதுக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் சுற்றுப்பகுதியில் வசிக்கும், ஏழை, எளிய பெண்களுக்கு, கடந்த, 2014-15ம் ஆண்டு, முதல்வராக இருந்த ஜெ., உத்தரவுப்படி, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா கிடைத்த மகிழ்ச்சியில், பெண்கள் குடிசையாவது அமைத்து, சொந்த இடத்தில் வசிக்கலாம் என, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.

அரசு நிலத்தை பிரித்து கொடுத்தால், வீடு கட்டலாம் என, தயாரான, 159 பேருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அதாவது, காலியிடம் தங்களுடைய என, மற்றொரு தரப்பு, பட்டாவுடன் ஆட்சேபனை தெரிவித்தது. அதாவது, கேட்பாரற்று கிடந்த அரசு நிலம், தங்களுக்கு சொந்தமான சில பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், மூன்று ஆண்டுகளாக தீர்வு கிடைக்க வில்லை. வீட்டுமனை வேண்டுமென கேட்டு, குழுவாக செயல்படும் சிலர், ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வாங்கி கொடுக்கின்றனர். அரசு தரப்பும், பயனாளிகளை எளிதாக பிடித்து, பட்டா வழங்கிவிடுகிறது.

வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளி, குறைந்தது ஆறு மாதங்களுக்குள், அந்த இடத்தில் வீடு கட்டி வசிக்க வேண்டும். பட்டா வாங்கிவிட்டு, இடத்தை பயன்படுத்தாமல் போட்டு வைப்பதால், அரசு தரப்பு, முந்தைய பட்டாவை ரத்து செய்துவிட்டு, மற்றொரு தரப்புக்கு பட்டா வழங்குகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகளால், 1.50 சென்ட் இடத்துக்கு, இருவேறு நபர்கள் சொந்தம் கொண்டாடு கின்றனர்.அரசு பதிவேட்டில், உரிமம் மாற்றப்பட்டாலும், ஏற்கனவே வழங்கிய பட்டாவை வைத்துக்கொண்டு, மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் பாதிப்பு வரும் என்பதால், எவ்வித தீர்வும் இல்லாமல், அப்போதைக்கு பிரச்னை முடித்து வைக்கப்படுகிறது.

இறுதி தீர்வு கிடைக்காமல், இருதரப்பு மக்களும், அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். காங்கயம் தாலுகா, நிழலி கிராமத்தில், பட்டா பெற்று, நிலம் கிடைக்காமல் போராடும் பயனாளிகளுக்கு, தகுந்த தீர்வு வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை, இதுபோன்ற சிக்கல் நிறைந்த பட்டா பிரச்னைகளுக்கு, விரைந்து தீர்வு காண முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X