புதுச்சேரி:வில்லியனுார் கொம்யூன் பகுதியில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி கொள்ள வேண்டும் என ஆணையர் ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் வரும் 20ம் தேதிக்குள் உரிய வகையில் விண்ணப்பித்து குடிநீர் இணைப்பை முறைப்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.மேலும் மத்திய அரசு நாட்டின் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு வரும் 2024 ம் ஆண்டிற்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் இலக்கினை அடைய 'ஜல் ஜீவன்' திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, உள்ளாட்சித்துறை செயலர் மற்றும் இயக்குனர் அறிவுறுத்தலின் படி, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் அனுமதி பெறமால் எடுக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது. மேலும் புதிய குடிநீர் இணைப்புகளை உடனுக்குடன் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாங்கி, விண்ணப்பிக்கலாம்.சட்ட விரோத இணைப்புகளை முறைப்படுத்த வரும் 20ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தவிதமான அபாரத கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும் பிப்ரவரி 5ம் தேதி வரை காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அபராத கட்டணத்தில் 50 சதவீதமும், பிப்ரவரி 5 முதல் மார்ச் 4ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நுாறு சதவீதம் அபாரதம் விதிக்கப்படும். மார்ச் 4ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிக்காதவர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள் எவ்வித முன் அறிவிபபின்றி துண்டிக்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE