மீனவர்களுக்கு பாதுகாப்பு முதல்வர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீனவர்களுக்கு பாதுகாப்பு முதல்வர் வலியுறுத்தல்

Added : ஜன 15, 2020
Share
புதுச்சேரி:காரைக்கால் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.டில்லி சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்
 மீனவர்களுக்கு பாதுகாப்பு முதல்வர் வலியுறுத்தல்

புதுச்சேரி:காரைக்கால் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி பிடித்து செல்லப்படுகின்றனர். படகுகள், வலைகள் சேதப்படுத்தப்படுகின்றன.எனவே, கடலில் மீன் பிடிக்க செல்லும் கரைக்கால் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய கடற்படையின் ரோந்து கப்பல் காரைக்கால் பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தார்.தொடர்ந்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, புதுச்சேரிக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X