பொது செய்தி

தமிழ்நாடு

மாத தவணை வசதி வேண்டும்!: நரிக்குறவர் இனத்தினர் கோரிக்கை

Added : ஜன 15, 2020
Share
Advertisement
திருப்பூர்:அடுக்குமாடி வீட்டுக்கான பங்களிப்பை செலுத்த முடியாததால், மாத தவணை வசதி வேண்டுமென, நரிக்குறவர் இனமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசிக்கும் மக் களை, பாதுகாப்பாக அப்புறப்படுத்த, அரசு திட்டமிட்டது. குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி வீடு கட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு

திருப்பூர்:அடுக்குமாடி வீட்டுக்கான பங்களிப்பை செலுத்த முடியாததால், மாத தவணை வசதி வேண்டுமென, நரிக்குறவர் இனமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் நகரப்பகுதியில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசிக்கும் மக் களை, பாதுகாப்பாக அப்புறப்படுத்த, அரசு திட்டமிட்டது. குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி வீடு கட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அடுக்குமாடி வீடு ஒதுக்கீடு பெறும் மக்கள், பழைய ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தொடர்ந்து வசித்து வருகின்றனர். மாவட்ட வருவாய்த்துறை தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. நொய்யல் கரையோரம் வசித்த நரிக்குறவர் இன மக்களுக்கு, வீரபாண்டியில் கட்டிய, அடுக்குமாடி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி வீடு பெறும் பயனாளிகள், மொத்த மதிப்பீட்டில், 10 சதவீதம் பங்களிப்பாக செலுத்த வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி, 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென, பயனாளிகளாக தேர்வு செய்தவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.திடீரென, 70 ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், தமிழக அரசே தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

நரிக்குறவர் இனமக்கள் கூறுகையில், 'பயனாளிகள் பங்களிப்பு தொகையை எங்களால் செலுத்த இயலாது. எனவே, நரிக்குறவர் நலவாரியம் அல்லது கலெக்டர் சிறப்பு நிதி மூலமாக, எங்களது பங்களிப்பை செலுத்தி, வீடு ஒதுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், மாத தவணை செலுத்துவது போன்ற ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X