பொது செய்தி

இந்தியா

குழந்தைக்கு தமிழில் பெயர் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

புதுச்சேரி:குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு, பரிசு வழங்கப்படும் என, படைப்பாளர் இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்கத்தின் நிறுவனர் ஆறுசெல்வம் கூறியிருப்பதாவது:குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பண்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையை போக்கவும், தமிழினத்தின் அடையாளத்தைக் காக்கவும், இன்று (15ம் தேதி) முதல் 2021 ஜன., 15 வரையில் புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
பெற்றோர் புதுச்சேரியில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும், பெயர்கள் பிறமொழிச் சொற்கள், எழுத்துகள் கலவாமல் இருக்க வேண்டும், அவ்வாறு பெயர் சூட்டும் ஒரு தாய், தந்தைக்கு ஒரு பரிசு என்ற கணக்கில் இவ்வாண்டுக்குள் எங்களுக்குத் தெரிவிக்கும் அனைத்துப் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்படும். இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் இரண்டு பரிசுகளாக வழங்கப்படும்.தங்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன், ஆறு செல்வன், எண் 4, காமராஜர் தெரு, வி.பி.சிங் நகர், சண்முகாபுரம், புதுச்சேரி 9, என்ற முகவரிக்கு தகவல்தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X