தனவேலுவை யாரோ இயக்குகின்றனர்: சொல்கிறார் சிவா எம்.எல்.ஏ.,

Added : ஜன 15, 2020
Advertisement
 தனவேலுவை யாரோ இயக்குகின்றனர்:  சொல்கிறார் சிவா எம்.எல்.ஏ.,

புதுச்சேரி:காங்., எம்.எல்.ஏ., தனவேலுவை, பின்னால் இருந்து சிலர் இயக்குவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., சிவா கூறியுள்ளார்.
அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க., சார்பில் வீராம்பட்டினம் கடற்கரை, தெப்பகுளம் அருகில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொகுதி செயலர் சீத்தாராமன் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார்.பொதுக்குழு உறுப்பினர் வேலன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிவரதன், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதாகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
விழாவை துவக்கி வைத்த தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது; சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படையில் கட்சியை சார்ந்தவருக்கோ, தொண்டர்களுக்கோ வாய்ப்பு கொடுத்திருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் காங்., கட்சியில் எழுந்திருக்காது. தேர்தல் நேரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் 'சீட்' வழங்கலாம் என்றால் இதுபோன்ற பிரச்னைகள் வரத்தான் செய்யும். காங்., எம்.எல்.ஏ, தனவேலுவை சிலர் பின்னால் இருந்து இயக்குகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X