'காங்., ஆட்சியை குறை கூற தனவேலுக்கு தகுதி கிடையாது'

Added : ஜன 15, 2020
Advertisement

புதுச்சேரி:'காங்., ஆட்சியை குறை கூறுவதற்கு தனவேலுக்கு எந்த தகுதியும் கிடையாது' என, அரசு கொறடா அனந்தராமன் கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:கடந்த 2 ஆண்டுகளாக காங்., கட்சியுடன் தனவேலு எம்.எல்.ஏ., தொடர்பில் இல்லை. காங்., ஆட்சி குறித்தும், முதல்வர் குறித்தும் குறை கூறுவதற்கு அவருக்கு தகுதி இல்லை.காங்., ஆட்சியை கலைப்பதற்காக, ஆட்சியை மாற்றி ரங்கசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டு வருவதற்காக பேரம் பேசினார்கள். அந்த முயற்சி எடுபடாத நிலையில், மாகி எம்.எல்.ஏ., நேரடியாக முதல்வரிடம் பேசினார். இந்த மாதிரியாக என்னை அணுகினர், யார் யார் தன்னை சந்தித்தனர் என முதல்வரிடம் தெளிவாக கூறினார்.மக்களுக்கு காங்., ஆட்சி எதுவும் செய்யவில்லை என்பது போன்ற தோற்றத்தை தனவேலு உருவாக்கி உள்ளார். முதல்வர், அமைச்சர்கள் மீது அபாண்டமான ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது, வேடிக்கையாக உள்ளார். முதல்வரை தேர்வு செய்வதற்கு மூன்றாவது கையெழுத்து போட்டவரே அவர்தான்.தெம்பும், திராணியும் இருந்தால் காங்., ஆட்சியில் ஏதாவது ஒரு ஊழல் என்று தனவேலுவால் நிரூபிக்க முடியுமா? காங்., ஆட்சிக்கு தொடர்ந்து களங்கம் கற்பிக்க நினைக்கிறார். ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இது, மிகுந்த கண்டனத்துக்குரியது.முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார். அதை, பா.ஜ.,வின் ஏஜெண்டாக செயல்படுவர் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. பாப்ஸ்கோ சேர்மனாக உள்ளார். அங்கு வேண்டுமானாலும் சி.பி.ஐ., விசாரணை வைக்கலாம். அவர் மீது உரிய நடவடிக்கையை கட்சி தலைமை எடுக்கும். அவருடன் காங்., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கிடையாது.இவ்வாறு, அனந்தராமன் கூறினார். காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X