பாலத்தில் ஆறாக பாயும் குடிநீர் முருகம்பாளையத்தில் அவலம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், முருகம்பாளையத்தில், குடிநீர் குழாய் உடைந்து, பெரியகரை ஓடையில், தண்ணீர் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சியின், 58வது வார்டுக்கு உட்பட்டது முருகம்பாளையம். வஞ்சிபாளையம் ரோட்டில், பெரியகரை ஓடையில், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள, சாயக்கழிவுகளும் அவ்வப்போது கொட்டப்படுகின்றன.இச்சூழலில், பெரியகரை ஓடை பாலம் அருகே, குடிநீர் குழாய் உடைந்து, கடந்த ஒரு வாரமாக, குடிநீர் வீணாகி வருகிறது.

அதாவது, பிரதான குடிநீர் குழாய் உடைந்து, தினமும், லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.ஓடை பாலத்தின் தென்புறம் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அங்கிருந்து பாலத்தின் மீது ஆறு போல் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்வதால், ரோடு, பாலம் விரைவில் பழுதாகும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X