முதல்வர் மீதான புகாரை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்: பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் மனு

Added : ஜன 15, 2020
Advertisement
 முதல்வர் மீதான புகாரை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்: பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் மனு

புதுச்சேரி:முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆளும் கட்சி எம்.எல்.ஏ., தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த வலியுறுத்தி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முறை கேடுகளில் ஈடுபட் டுள்ளதாக ஆளும் காங்., கட்சி எம்.எல்.ஏ., தனவேலு குற்றம் சாட்டி இருந்தார்.இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் நேற்று மாலை ராஜ்நிவாசில் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.அதில், 'முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., தனவேலு தெரிவித்துள்ள ஊழல் புகார்கள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகார்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறி உள்ளனர்.மனு அளித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:காங்., கட்சியை சேர்ந்த தனவேலு எம்.எல்.ஏ., முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவாதிக்க, சிறப்பு சட்டசடை கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்.காங்., எம்.எல்.ஏ., ஜான்குமார் மீதும், குயில்தோப்பு விவகாரத்தில் காங்., கட்சியை சேர்ந்த ராணி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்,அனைத்திற்கும் கவர்னரை காரணம் காட்டி தப்பித்து கொள்கின்றனர். பொங்கல் பரிசாக தமிழ்நாட்டில் ரூ. ஆயிரம் கொடுத்தால், புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் வழங்கலாம். ஊழலுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செயல்படுவதால் அவரை மாற்ற வேண்டும் என கூறுகிறார்கள்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X