பொது செய்தி

தமிழ்நாடு

'அன்பால் வெல்ல முடியும் ' சொற்பொழிவில் கருத்து

Added : ஜன 15, 2020
Advertisement

அவிநாசி:'அன்பால் மட்டுமே உலகை வெல்ல முடியும்' என, ஆன்மிக சொற்பொழிவில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அவிநாசி வியாசராசர் ராம நாம பஜனை மடத்தில், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், கம்பராமாயண சொற்பொழிவு நடந்தது. அதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி
கல்யாணராமன் பேசியதாவது:சுயநலவாதிகள்தான், நமக்கு ஏன் வம்பு என இருந்து விடுவார்கள். தர்மத்தை கடைபிடிப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். அன்பால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும். பணம், பதவியால் அடக்கிஆண்டுவிடலாம் எனஎண்ணக்கூடாது.

ஒவ்வொரு துறையிலும், நம்மை விட திறமைசாலிகள் இருப்பர் என்பதை உணர்ந்தால், ஆணவ எண்ணம் குறைந்து போகும். சினிமாவில் கூட அதர்மம் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில் கதை எழுதுகிறார்கள். அதர்மம், எந்த இடத்திலும் ஜெயிக்க முடியாது. அதற்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் நமக்கு போதிக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X