பான் மசாலா விற்பனை; அபராதம் விதித்த அதிகாரிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பான் மசாலா' விற்பனை; அபராதம் விதித்த அதிகாரிகள்

Added : ஜன 15, 2020
Share
 'பான் மசாலா' விற்பனை; அபராதம் விதித்த அதிகாரிகள்

பல்லடம்,:பல்லடம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி அபராதம் விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த குண்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், பல்லடம் வட்டார அலுவலர் கேசவராஜ் ஆகியோர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த, நான்கு கடை உரிமையாளர்களுக்கு, தலா, 5 ஆயிரம் வீதம், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 2 கிலோ பாலிதீன் கவர்கள், தேதி குறிப்பிடாத உணவு பொருட்கள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், சுகாதாரமற்ற உணவு பொருள் விற்பது கண்டறியப்பட்டால், சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 69ன் கீழ், போதை பொருள் விற்பனை செய்த வியாபாரிகளிடம், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்திய வியாபாரிகள், மீண்டும் இதே குற்றத்தை செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் 10 ஆயிரம் ரூபாயாக விதிக்கப்படும். மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் 17 இடங்களில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X