மாநில விளையாட்டு போட்டி சேகரட் ஹார்ட் பள்ளி சாதனை

Added : ஜன 15, 2020
Advertisement
 மாநில விளையாட்டு போட்டி சேகரட் ஹார்ட் பள்ளி சாதனை

விழுப்புரம்:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகையன் நினைவு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கேரம் போட்டிகள் நடந்தது.
கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்த போட்டிகளில், விழுப்புரம் துாய இருதய ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மாநில அளவில், 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் புவனேஷ், ஜிஜேந்திரன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், ஒற்றையர் பிரிவில் மாணவர் பவன்குமார் மூன்றாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் மாணவி மாலினி நான்காம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த, விழுப்புரம் துாய இருதய ஆங்கிலோ இந்திய மேல்நிலை பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி டாக்டர் மங்களமேரி ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X