பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தில் மதுஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
டாக்டர் அப்துல்கலாம் கனவை நனவாக்கும் இளைஞர்கள், நேருயுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் நடந்த முகாமிற்கு, முன்னாள் ஊராட்சித் தலைவர் சுசீலா ஜெகநாதன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பிரபு முன்னிலை வகித்தனர்.தாலுகா இன்ஸ்பெக்டர் கனகேசன், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஒழிக்கும் வழிமுறைகள் பற்றியும், சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை, நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X