கீழே கிடந்த, ரூ.40 ஆயிரம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழே கிடந்த, ரூ.40 ஆயிரம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

Added : ஜன 15, 2020

திருப்பூர்:திருப்பூரில், ரோட்டில் தவற விட்டு சென்ற, 40 ஆயிரம் ரூபாயை போலீஸ்
ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் செரங்காடு, பி.ஏ.பி., நகர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர் நேற்று காலை அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பள்ளி அருகே ரோட்டில் பணப்பை ஒன்று கிடந்தது. சுரேஷ் எடுத்து பார்த்ததில், 40 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்து பார்த்தார். பணத்தை தவற விட்டு சென்றவர் குறித்து தெரியவில்லை.

இதனால், அவர் தனது நண்பர்களான செந்தில்குமார், கோவிந்தராஜ் ஆகியோருடன், ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர் அங்கு, எஸ்.ஐ., ராஜூவிடம், பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை ஒப்படைத்த சுரேைஷ போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டு சென்றவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X