பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்க விழா

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்க விழா

விக்கிரவாண்டி:'கிராமபுற இளைஞர்கள் முயற்சித்தால் ஒலிம்பிக் போட்டில் பங்கேற்று தங்கம் வெல்லலாம்' என கலெக்டர் அண்ணாதுரை பேசினார்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் நடந்த அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்க விழாற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஸ்ரேயா பி சிங், மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார்.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன் விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கி பேசுகையில், 'கிராமபுற இளைஞர்கள் தங்கள் விளையாட்டு திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர் விளையாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் விக்கிரவாண்டி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் சண்முகம் முன்னின்று செய்து வருகிறார்' என்றார்.கலெக்டர் அண்ணாதுரை பேசுகையில், 'சமீப காலமாக இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று வருகிறது. இதில் தமிழக வீரர்கள் பங்கேற்று தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடி வருகின்றனர். கிராமபுற இளைஞர்கள் முயற்சித்தால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறவும், நமது பெருமை மிக்க தேசிய கொடியை வீரர்கள் கையிலேந்தி செல்ல வாய்ப்புக் கிடைக்கும்' என்றார்.
விழாவில், தாசில்தார் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் விஜயன், வி.ஏ.ஓ., பால்ராஜ், பி.டி.ஓ., சுமதி, துணை பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், நாகராஜன், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் கலியமூர்த்தி, நாகப்பன், வங்கி தலைவர்கள் வேலு, பன்னீர், முகுந்தன், லட்சுமி நாராயணன், சரவணகுமார், வாசு பிரகாஷ், இயக்குனர்கள் சுப்ரமணி, ரவி, ரமேஷ், ராஜவேல், அன்னியூர் ஆறுமுகம், கிருஷ்ணன், ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன், வங்கி துணைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X