பொது செய்தி

தமிழ்நாடு

'பட்ஜெட் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும்!' செல்லமுத்து வேண்டுகோள்

Added : ஜன 15, 2020
Advertisement

பல்லடம்:''பட்ஜெட் குறித்து விவசாயிகளுடன் ஆலோசிக்க வேண்டும்,'' என, உ.உ., கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். உழவர் உழைப்பாளர் கட்சியினர் சார்பில், பொங்கல் விழா, காரணம்பேட்டை உழவாலயம் அலுவலகத்தில் நடந்தது.

அதில், பங்கேற்ற மாநில தலைவர் செல்லமுத்து பேசியதாவது:உழைக்கும் மாடுகளுக்கும், ஒளிரும் சூரியனுக்கும், பொங்கல் கொண்டாடுகிறோம். உழவர்களுக்கு உகந்த நாளான இன்று, உழவர்கள் கடன் சுமையில் உள்ளனர். பட்ஜெட்டின் போது, தொழிலதிபர்களை அழைத்து ஆலோசிப்பது போல், விவசாயிகளையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும்.

நெல்லுக்கும், விளை பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்டை, கால்நடை சந்தை, அல்லது உழவர் சந்தை ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர்
தேன்மொழி, துணை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் உ.உ.கட்சி மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X