டி.எஸ்.சி., சேலஞ்சர் கிரிக்கெட் திருப்பூர் அணி அபாரம்

Added : ஜன 15, 2020
Advertisement

திருப்பூர்:டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், மைசூரு சி.ஜி.எஸ்., அணி, திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி ஆகியன வெற்றி பெற்றது.

திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி முருகம்பாளையம் ஓயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து
வருகிறது.நேற்றைய முதல் போட்டியில் மைசூரு சி.ஜி.எஸ்., அணி - திருச்சூர் அதிரியா
கிரிக்கெட்அகாடமி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மைசூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 30 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 176 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய
திருச்சூர் அதிரியா அணி 29.3 ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 162 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியுற்றது.

மற்றொரு போட்டியில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் - புதுச்சேரி சுப்புஸ் அகாடமி அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி, 30 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 209 ரன் எடுத்தது. சிபியன்தால் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 பந்துகளில், 82 ரன் எடுத்தார்.தொடர்ந்து ஆடிய, புதுச்சேரி அணி, 30 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 90 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 119 ரன் வித்தியாசத்தில், ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த அணி வீரர்
சிபியன்தால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X