பொது செய்தி

தமிழ்நாடு

'வளங்களை காப்பது கடமை' பொங்கல் விழாவில் 'அட்வைஸ்'

Added : ஜன 15, 2020
Advertisement

பல்லடம்:'இயற்கை வளங்களை காப்பது நம் கடமை,' என, பல்லடத்தில் நடந்த சுற்றுச்சூழல் பொங்கல் விழாவில், கருத்து தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் பொங்கல் விழா கொண்டாடப்பட் டது. பள்ளி தலைமை ஆசிரியை நீலவேணி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜ் வரவேற்றார். திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய கோட்ட பொறியாளர் சண்முகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மாசு கட்டுப்பாடு வாரிய கோட்ட பொறியாளர் பேசியதாவது:சென்னை உட்பட பெருநகரங்க ளில், பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில், டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை
எரிக்கின்றனர். டயர்களை எரிப்பதும் ஜாலியாக இருந்தாலும், அதிலிருந்து வெளியாகும்
வேதியியல் பொருட்கள் சூழலை பாதிக்கின்றன.

திருப்பூர், கோவை சுற்று வட்டாரங்களில், அது போன்ற பாதிப்புகள் குறைந்த அளவிலேயே
உள்ளன. இயற்கை வளங்களை காத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை.பிளாஸ்டிக் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்களின் முயற்சியால் மட்டுமே பிளாஸ்டிக் தடையை நிரந்தரமாக கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X