இந்தியா பரிதாப தோல்வி: மகரூப் "ஹாட்ரிக்' சாதனை

Updated : ஜூன் 23, 2010 | Added : ஜூன் 22, 2010
Advertisement
Asia cup,India,srilanka,இந்தியா,தோல்வி,மகரூப்,ஹாட்ரிக்

தம்புலா : ஆசிய கோப்பை லீக் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய மகரூப் "ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்தினார்.


இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. வரும் 24ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்னதாக நேற்று தம்புலாவில் நடந்த முக்கியத்துவமில்லாத கடைசி லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககராதுணிச்சலாக பீல்டிங் தேர்வு செய்தார்.


துவக்கம் ஏமாற்றம்: இந்திய வீரர்கள் துவக் கத்தில் இருந்தே ஏனோதானே என ஆடினர். கடந்த போட்டிகளில் கலக்கிய காம்பிர்(23), இம்முறை மாத்யூஸ் வேகத்தில் ரந்திவின் சூப்பர் "கேட்ச்சில்' வெளியேறினார். அடுத்து வந்த விராத் கோஹ்லி(10) மீண்டும் சொதப்பினார். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக்(40) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். ஹெராத் பந்தை "ஸ்வீப்' செய்ய முயன்ற ரெய்னா(18) அவுட்டாக, இந்தியா 22.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து தத்தளித்தது.இதற்கு பின் கேப்டன் தோனி, ரோகித் சர்மா இணைந்து பொறுப்பாக ஆடினர். இவர்கள், ஐந்தாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர்.இந்த நேரத்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட தோனி(41), கபுகேதராவின் துல்லிய "த்ரோ'வில் ரன் அவுட்டானார்.


மகரூப் "ஹாட்ரிக்': பின் 39வது ஓவரை வீசிய மகரூப், போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்தில் ரவிந்திர ஜடேஜா "டக்' அவுட்டானார். அடுத்த பந்தில் பிரவீண் குமார்(0) போல்டானார். மூன்றாவது பந்தை அனுபவ ஜாகிர் சமாளிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், நன்கு விலகிச் சென்ற பந்தை வீணாக அடிக்க, "கீப்பர்' சங்ககரா அருமையாக பிடிக்க... மகரூப் "ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்தினார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்தியாவின் நிலைமை மோசமானது.


ரோகித் ஆறுதல்: தனிநபராக போராடிய ரோகித் சர்மா, ஒரு நாள் அரங்கில் தனது 5வது அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 69 ரன்களுக்கு(7 பவுண்டரி) ரன் அவுட் டாக, நம்பிக்கை தகர்ந்தது. இந்திய அணி 42.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் டானது. இலங்கை தரப் பில் "ஹாட்ரிக்' சாதனை படைத்த மகரூப் மொத்தம் 5 விக்கெட் வீழ்த்தினார்.


சுலப வெற்றி: சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தரங்கா, தில்ஷன் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். இவர் 24 ரன்களுக்கு வெளியேறினார். தரங்கா 38 ரன் எடுத்தார். பின் சங்ககரா, ஜெயவர்தனா சேர்ந்து அசத்தினர். இருவரும் பவுண்டரிகளாக அடித்தனர். சங்ககரா 73 ரன்களுக்கு பிரவீண் வேகத்தில் வீழ்ந் தார். ரவிந்திர ஜடேஜா பந்தில் ஜெயவர்தனா ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 37.3ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. தவிர, பைனலுக்கு சிறந்த பயிற்சியும் எடுத்துக் கொண்டது. ஜெயவர்தனா(53), கண்டம்பி(7) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்ட நாயகன் விருதை மகரூப் வென்றார்.


மூன்றாவது வீரர் : இலங்கை சார்பில் "ஹாட்ரிக்' சாதனை படைக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் மகரூப். இதற்கு முன் இந்த அணியின் வாஸ் 2 முறை(எதிர் ஜிம்ப்., 2001 - எதிர் வங்கதேசம், 2003) மற்றும் மலிங்காஒரு முறை(எதிர் தென் ஆப்ரிக்கா, 2007)இச்சாதனை படைத்துள்ளனர். இது ஒரு நாள் போட்டிகளில் நிகழ்த்தப்படும் 26வது "ஹாட்ரிக்' சாதனை.


Advertisement
வாசகர் கருத்து

SARAVANAN - tambaram,இந்தியா
23-ஜூன்-201013:51:05 IST Report Abuse
 SARAVANAN indha jadeja yaroda influencela teamla edukuranganu therilai. yarukavadu therinja sollungalen.
Rate this:
Share this comment
Cancel
Abu Rabia - Riyadh,இந்தியா
23-ஜூன்-201012:57:47 IST Report Abuse
 Abu Rabia தான் செய்த சாதனைக்காக படைத்தவனுக்கு (இறைவனுக்கு) நன்றி சொல்லும் உன்னை வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
உதய சூரியன் - chennai,இந்தியா
23-ஜூன்-201009:30:52 IST Report Abuse
 உதய சூரியன் வெற்றி கோப்பை டோனி நமக்கு பெற்று தருவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X