பொது செய்தி

தமிழ்நாடு

அரிமா சங்கம் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement
 அரிமா சங்கம் பொங்கல் விழா

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சங்க தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தண்டபாணி, அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தெய்வீகன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். செயலர் பழனி வரவேற்றார்.விழாவையொட்டி, பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெண்களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி, ஊசி நுால் கோர்த்தல், பலுான் உடைத்தல் போட்டியும், ஆண்களுக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.விழாவில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், ரோட்டரி தலைவர் ஆறுமுகம், முன்னாள் தலைவர் மூர்த்தி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல் அரிசி ஆலை அரங்கில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் உறுப்பினர்கள் அனைவரும் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர். விழாவை முருக குமார் தொகுத்து வழங்கினார்.பொருளாளர் பாலசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X