பொது செய்தி

தமிழ்நாடு

மேலத்தேனுாரை தனி ஊராட்சியாக அறிவிக்க மக்கள் கலெக்டரிடம் மனு

Added : ஜன 15, 2020
Advertisement
 மேலத்தேனுாரை தனி ஊராட்சியாக அறிவிக்க மக்கள் கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி:மேலத்தேனுாரை தனி ஊராட்சியாக அறிவிக்கோரி கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து கிராம பொதுமக்கள் கலெக்டர் கிரண் குராலாவிடம் அளித்த மனு:கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், லா.கூடலுார் ஊராட்சியில் லாலாபேட்டை, கீழத்தேனுார், மேலத்தேனுார், சேராந்தாங்கல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.இங்கு மொத்த மக்கள் தொகை 7,500 ஆகும். 4,000 வாக்காளர்கள் உள்ளனர். மேலத்தேனுார் கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் 5 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது.இதனால் மத்திய, மாநில அரசு திட்டங்கள் முழுமையாக எங்களது கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. லா.கூடலுார், லாலாபேட்டை கிராமத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. லா.கூடலுார் பகுதியைச் சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வருவதால், குடிநீர், சாலை, குடியிருப்பு வசதி உட்பட பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. லா.கூடலுார் ஊராட்சியை பிரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலகத் திற்கு கடந்த 1996ம் ஆண்டு மனு அனுப்பப்பட்டது.எனவே, லா.கூடலுார் ஊராட்சியை இரண்டாக பிரித்து மேலத்தேனுாரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சியாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X