அமராவதி தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் பட்டுவாடா| Dinamalar

அமராவதி தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் பட்டுவாடா

Added : ஜன 15, 2020
Share

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு, இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த, 1960 ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.ஆண்டுதோறும், 3,000 விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர். கரும்பு கொள்முதல் செய்யும் பகுதி மடத்துக்குளம் கரும்பு மடத்துக்குளம், நெய்க்காரப்பட்டி, பழநி குமரலிங்கம் கணியூர் ஆகிய 5 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை ஆண்டுதோறும் அரவை பருவமாகும். சராசரியாக தினமும், 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் இங்குஉள்ளன.இதனை இயக்க, 400 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இது தவிர, அலுவலகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.இவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, 2 ஆண்டுகளாகவே உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்பட்ட நிலையில், சம்பளம் வழங்க வலியுறுத்தி பல போராட்டங்கள்நடந்தன.

இந்த மாத தொடக்கம் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மூன்று மாதம் சம்பளம் நிலுவை ஆனது. இதனால், கடந்த வாரம் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்நடத்தினர்.இரண்டு நாளாக போராட்டம் நீடித்ததால் ஆலை நிர்வாகத்தினர் சமரசம் பேசி, 13ஆம் தேதி 2 மாதம் சம்பளம் வழங்குவதாக உறுதிவழங்கினர்.

ஆலை நிர்வாகத்தினர் கூறியபடி நேற்று முன்தினம் தொழிலாளர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்கப்பட்டது.இதுகுறித்து ஆலைத்தொழிலாளர்கள் கூறுகையில, 'பொங்கல் பண்டிகை ஒரு நாள் முன்பு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால், எங்களுக்கு பண்டிகை இனிப்பாக அமைகிறது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X