இளவரசர் ஹாரி முடிவுக்கு ராணி எலிசபெத் ஆதரவு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (4)
Advertisement
இளவரசர் ஹாரி முடிவுக்கு  ராணி எலிசபெத் ஆதரவு

லண்டன் :பிரிட்டன் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறப் போவதாக,இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் எடுத்துள்ள முடிவுக்கு, ராணி எலிசபெத் ஆதரவு தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லசுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.






மூத்த மகன் வில்லியம்ஸ், இரண்டாவது மகன் ஹாரி, 35. ஹாரியின் மனைவியான மேகன், 38, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை.இந்நிலையில், ராஜ வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக, ஹாரி மற்றும் மேகன், சமீபத்தில் அறிவித்தனர்.சாதாரண வாழ்க்கை வாழப் போவதாகவும், சொந்தக்காலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஹாரியை சமாதானப்படுத்த, அரச குடும்பத்தினருடன், லண்டனில் உள்ள சாண்ட்ரிங்டம் எஸ்டேட்டில், ராணி எலிசபெத், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவது குறித்து, ஹாரியிடம், எலிசபெத் கேட்டார்.அதன் பின், ஹாரி - மேகன் தம்பதியின் முடிவுக்கு அரச குடும்பத்தினர் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக, ராணி எலிசபெத் அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:ஹாரியும், அவரது மனைவியும் புதிய வாழ்க்கையை வாழப் போவதாக முடிவு எடுத்து உள்ளனர். அதற்கு அரச குடும்பம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களது தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட, அரச குடும்பம் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மேலும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை, ஹாரி தம்பதி, கனடாவிலும், பிரிட்டனிலும் வசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
15-ஜன-202021:11:38 IST Report Abuse
dandy வெளியில் இருந்து வந்த கூனி ஒரு ஆண்டில் குடும்பத்தை பிரித்து விட்டாள் ..அடுத்து பாக பிரிவினை ..அடுத்து விவாகரத்து
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜன-202006:00:49 IST Report Abuse
blocked user சுதந்திரம் விலைமதிப்பில்லாது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜன-202005:59:07 IST Report Abuse
Natarajan Ramanathan அப்பனே எழுபது வருஷமா சுடலைமாதிரி காத்திருக்கான். இவனும் காத்திருந்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அரச குடும்ப கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X