தமிழ்நாடு

ஆல்கொண்டமால் கோவில் திருவிழா: பாரம்பரிய கலையோடு களைகட்டும் கிராமங்கள்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
ஆல்கொண்டமால், கோவில், திருவிழா, பாரம்பரியகலை, கிராமங்கள்

உடுமலை:பிரசித்தி பெற்ற, ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது; கிராமங்களிலும், விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற, ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு, ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காணவும் வழிபாடு செய்கின்றனர்.பால் வளம் பெருக, ஆல்கொண்டமாலுக்கு பாலாபிேஷகம் செய்கின்றனர்.

இந்தாண்டுக்கான மூன்று நாள் திருவிழா, நாளை, (16ம் தேதி), அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜையுடன் துவங்குகிறது. அன்று, மாலை, 6:00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜை நடக்கிறது.வரும், 17ம் தேதி முக்கிய நிகழ்வான திருவிழா நடக்கிறது. அன்று, அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பகல், 11:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது. வரும் 4ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரமும், இரவு, 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை, மகாதீபாராதனை நடக்கிறது.சிறப்பு ஏற்பாடுகள்

திருவிழாவையொட்டி, பல மாவட்டங்களில் இருந்து,ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வருவார்கள்; இதற்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள், இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெரிசலை தவிர்க்க, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது; சிறப்பு பஸ்கள் திரும்பிச்செல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு, துாய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

முன்பகுதியில், நிழலுக்காக தற்காலிக கூரை அமைத்துள்ளனர்.காணிக்கையாக அளிக்கும் கால்நடைகளை பராமரிக்க, தற்காலிக பந்தல், ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவில் முன்புள்ள மைதானத்தில், கேளிக்கை மற்றும் விளையாட்டு சாதனங்கள், தற்காலிககடைகள் அமைக்கப் பட்டு வருகிறது.கிராமங்களில் உற்சாகம்தைத்திருநாளின் போது, மாடுகள் ஈன்றெடுக்கும், கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்கு உரியதாக, சுற்றுப்பகுதி கிராம மக்கள் கருதுகின்றனர். எனவே, அவற்றை கிராம சலகெருதாக தேர்வு செய்து, சிறப்பு கவனத்துடன் பராமரிக்கின்றனர்.

மார்கழி மாதம் துவங்கியதும், இரவு நேரங்களில், சலகெருது மறித்தல் எனப்படும் பாரம்பரிய கலையை ஆடுகின்றனர். இந்த சலகெருதுகளை, பொங்கலன்று காலை, அலங்கரித்து, வீடு, வீடாக அழைத்துச்சென்று சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.பின்னர், ஆல்கொண்டமால் திருவிழாவன்று, சலகெருதுகளை, கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்வது பாரம்பரியமாக இன்றும் தொடர்கிறது.

இதற்காக கிராமங்களில், சலகெருதுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தேவராட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆடி, ஆல்கொண்டமால் திருவிழாவை வரவேற்க, கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X