என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

Added : ஜன 15, 2020
 என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்டம் நிறைவு விழா நடந்தது.
கடந்த 6 நாட்களாக நடந்த முகாம் நிறைவு விழா விற்கு, இமாகுலேட் கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கினார்.மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நலப்பணி திட்டங்களை செய்து வந்தனர். அவர்களை பாராட்டும் விதமாக அனைத்து மாணவி களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு பல்வேறு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளை நிறுவனர்கள் சிறப்புறையாற்றினர். நிகழ்ச்சியில் பேராசிரியர் சவரிராஜ், நாட்டு நலபணித்திட்ட ஆசிரியர் கண்ணன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X