பொது செய்தி

தமிழ்நாடு

பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கணும்: ஒன்றிய குழு நிர்வாகம் செயல்படுத்த எதிர்பார்ப்பு

Added : ஜன 15, 2020
Advertisement
 பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கணும்: ஒன்றிய குழு நிர்வாகம் செயல்படுத்த எதிர்பார்ப்பு

உடுமலை:பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைத்து, மாநில நெடுஞ்சாலையில் நெரிசலை தவிர்க்கும் திட்டத்தை, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய குழு நிர்வாகத்தினர் செயல்படுத்த எதிர்பார்ப்புநிலவுகிறது.பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது.

பெதப்பம்பட்டியில் ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களும், நுாற்பாலைகள் மற்றும் வணிக கடைகளும் இப்பகுதியில் உள்ளன.பொள்ளாச்சி-பெதப்பம்பட்டி வழித்தடத்தில், 10க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே போல், தாராபுரம், கரூர் பகுதிக்கும், உடுமலையில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை வழியாக கோவைக்கும், நால்ரோடு வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், நால்ரோடு பகுதியில் எப்போதும் நெரிசல் காணப்படும். பஸ்கள் நிற்பதற்கும், பயணிகள் காத்திருக்கவும், போதிய இடவசதியில்லை.

காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக நெரிசலால், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், பெதப்பம்பட்டியில் வாரச்சந்தை அமைக்கவும், பஸ் ஸ்டாண்ட் கட்டவும், சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, கருத்துரு சமர்ப்பிக்க, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இக்கருத்துரு அடிப்படையில் வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகிறது.ஆனால், பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம், கண்டுகொள்ளப்படவில்லை.எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் உட்பட நிர்வாகிகள், நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X