பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 15, 2020
Advertisement
 கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், அறக்கட்டளை உறுப்பினர் இம்தியாஸ் அகமது மற்றும் சதாம் உசேன் பங்கேற்றனர்.கல்லுாரியில் மாணவர்கள் வேட்டியுடனும், மாணவிகள் சேலை உடுத்தியும் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
கோலம், கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நிறைவாக புதுப்பானையில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். உடற்கல்வி இயக்குனர்கள் சண்முகம், மோகன் விழாவை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X