பொது செய்தி

தமிழ்நாடு

சந்தை வளாக ரோடுகள் புதுப்பிக்கும் பணி: ரூ.48 லட்சத்தில் மேற்கொள்ள நடவடிக்கை

Added : ஜன 15, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை நகராட்சி சந்தை வளாகத்திலுள்ள, 902 மீட்டர் நீளமுள்ள ரோடுகள், 48 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.உடுமலை நகராட்சி சந்தை வளாகம், 16.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சந்தை வளாகத்திற்குள், 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தரக்கடைகள் உள்ளன. தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 150 முதல் 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.சரக்கு ஆட்டோ, சரக்கு வேன், லாரி என, 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம், விளைபொருட்கள் வருகிறது. தினசரி காய்கறி வியாபாரமும், திங்கட்கிழமைகளில் சந்தை கூடும் போது, ஆயிரக்கணக்கான கடைகள் அமைக்கப்படுகிறது.

சனிக்கிழமைகளில், மாட்டுச்சந்தையும், நாட்டு கோழி சந்தையும், திங்கட்கிழமை அதிகாலை, ஆட்டுச்சந்தையும் நடக்கிறது. கால்நடை சந்தைக்கு ஏராளமான மாடு, ஆடுகளும், வியாபாரி களும் வருகின்றனர். ஆனால், சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

வளாகத்திலுள்ள ரோடுகள், 20 ஆண்டுக்கு முன் போடப்பட்டதோடு, தொடர்ந்து பராமரிக்காத தால், முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மழை காலங்களில், சேறும், சகதியுமாக மாறி, கடும் பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காண, சந்தை வளாகத்திலுள்ள ரோடுகளை புதுப்பிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், மத்திய அரசின், 14 வது நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீட்டின் கீழ், 902 மீட்டர் நீளமுள்ள அனைத்து ரோடுகளும், 48 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப் படுகிறது.

இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து, டெண்டர் பணிகள் துவங்கியுள்ளதாகவும், விரைவில் பணிகள் துவங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.நுழைவாயில் அலங்கார வளைவு நகராட்சி சந்தையில், இரவு நேரங்களில் மின் விளக்கு வசதியும், வந்து செல்லும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் ஆகிய வசதிகள் இல்லை.அதே போல், நகராட்சி சந்தை வளாகத்தில் ஆக்கிரமிப்புகளும் அதிகளவு உள்ளன. அவற்றையும் அகற்ற வேண்டும். பழநிரோடு பகுதியில், நகராட்சியால் மீட்கப்பட்ட இடத்தில், திட்டமிட்டபடி, நுழைவாயில், அலங்கார வளைவு ஆகிய திட்டங்களையும் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X