பொது செய்தி

தமிழ்நாடு

உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்

Added : ஜன 15, 2020
Advertisement

தியாகதுருகம்:பொங்கல் பண்டிகை தினத்திலும் ஓய்வெடுக்காமல் பருவத்தில் பயிர் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை தொடர்ந்து இரு ஆண்டுகளாக ஏமாற்றிய நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சீராக பெய்தது. இதனால் விவசாய பணிகள் புத்துயிர் பெற்று கிராமங்களில் பசுமை திரும்பியுள்ளது.தற்போது நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பெரும்பாலான விளை பயிர்களின் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. நெல் அறுவடை செய்த நிலங்களை மீண்டும் உழுது அடுத்த போகம் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மழையால் கிடைத்த நீர்வளத்தை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தி மகசூல் ஈட்ட முனைப்பு காட்டி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை தினத்திலும் ஓய்வெடுக்காமல் உழவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.அதேபோல் குறித்த தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக நெல், பருத்தி, உளுந்து பயிர் அறுவடையும் பருத்திப் பஞ்சு சேகரிக்கும் பணிகள் பண்டிகை தினத்திலும் நடந்து வருகிறது.இதனால் கிராமப்புறங்களில் உள்ள வயல் வெளிகளில் பண்டிகை தினத்திலும் விவசாயிகள் வேலை செய்வதைக் காண முடிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X