திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணிக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 8 பேர் தேர்வு

Added : ஜன 15, 2020
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணிக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பாக, விருதுநகரில், வரும், 18ம் தேதி, மாவட்டங்களுக்கு இடையிலான, சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிகள் விருதுநகரில் நடக்கிறது.இதில், விளையாடும் திருப்பூர் மாவட்ட அணிக்காக, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள், சுபாஷ், நவீன்குமார், மனோகரன், சரவணக்குமார், கதிரேசன், தினேஷ், வீரமணிகண்டன், வினோத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட அணிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார், மாவட்ட அணிக்காக விளையாட தேர்வு பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X