பொது செய்தி

தமிழ்நாடு

எச்சரிக்கை! நிதி நிறுவனங்களுக்கு எஸ்.பி.....சட்டத்தை மீறினால் நடவடிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement
 எச்சரிக்கை! நிதி நிறுவனங்களுக்கு எஸ்.பி.....சட்டத்தை மீறினால் நடவடிக்கை

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் பகுதியில் நிதிமோசடி தொடர்பான புகார்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., எச்சரித்துள்ளார்.
திருக்கோவிலுாரில் நிதி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வரவேற்றார். டி.எஸ்.பி., மகேஷ் முன்னிலை வகித்தார்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை குறிப்பாக திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நிதி தொடர்பான புகார்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இந்த பகுதியில்தான் நிதி நிறுவனங்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. நிதி தொடர்பான சட்ட திட்டங்கள், விதிமுறைகள் குறித்து நிதி நிறுவனங்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.நிதி நிறுவனங்களை நடத்துபவர்கள் இரண்டு வழிகளில் தான் செயல்பட முடியும். ஒன்று சிட்பண்ட். இதற்கு தமிழ்நாடு சிட் பண்ட் ஆக்ட் 96ன் படி பதிவுசெய்து செயல்பட வேண்டும். அடுத்தது வட்டி தொழில் செய்வது.இதற்கென்று லைசென்ஸ் எடுத்து மணி லேண்டர் ஆக்ட் 57ன் படி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் தொழில் செய்ய முடியும்.
இதைத்தாண்டி உரிமம் இல்லாமல் சீட்டு பிடிப்பது, தீபாவளி பரிசு திட்டத்தில் சேர்ப்பது, வட்டி தொழில் செய்வது சட்டவிரோதமானது. இந்த இரண்டு சட்டதிட்டங்களுக்குட்பட்டு தொழில் செய்பவர்கள் கூட, எது சரி, எது குற்றம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதனையும் மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருக்கோவிலுாரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனை ஒழுங்குபடுத்த அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி விரைவில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எஸ்.பி., பேசினார்.கூட்டத்தில் நிதி நிறுவனங்கள் நடத்துபவர்கள் கலந்து கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் குணபாலன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X