அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., செயற்குழுக் கூட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement
 தி.மு.க., செயற்குழுக் கூட்டம்

விழுப்புரம்:விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.
மத்திய மாவட்ட செயலர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு ஜனகராஜ், துணைச் செயலர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர பொறுப்பாளர் சக்கரை, பொதுக்குழு பஞ்சநாதன், இளைஞரணி தினகரன், மாணவரணி ஸ்ரீவினோத், தொண்டரணி கபாலி உட்பட ஒன்றிய செயலர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொங்கல் பண்டிகை நாளில், மாவட்டத்தில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் தலைவர் ஸ்டாலினுக்கு, மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது.அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் திரளான வாகனங்களோடு வந்த நிர்வாகிகள் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணைச் செயலர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X