பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் அறுவடை துவக்கம்

Added : ஜன 15, 2020
Advertisement
 மக்காச்சோளம் அறுவடை துவக்கம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடை தொடங்கியுள்ளது.

அமராவதி அணையில் உள்ள நீர் இருப்பை பயன்படுத்தி, மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில் பாசனம் நடக்கிறது. இது தவிர, புதிய ஆயக்கட்டு பகுதியில் பலநுாறு ஏக்கர் விளைநிலங்கள் கிணற்றுப்பாசனம் மூலம் பயன்படுகிறது.வாய்க்கால் மற்றும் கிணற்றுப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மக்காச்சோளம் சாகுபடி நடந்தது.

புதிய ஆயக்கட்டு முக்கிய பயிரான மக்காச்சோளம், மடத்துக்குளம் பகுதியில், 600 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டது. நுாறு நாட்களை கடந்த நிலையில், பல இடங்களில் தற்போது மக்காச்சோளம் அறுவடை தொடங்கி நடக்கிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'நெல் மற்றும் கரும்புக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் தான் கை கொடுக்கும் பயிராக உள்ளது. குறைவான பாசன நீர் உள்ள விளைநிலத்தில் மக்காச்சோளம் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது.

தற்போது, இதனை அறுவடை செய்து வருகிறோம். இவை விலைக்கு விற்கப்படுகிறது. மீதி உள்ள மக்காச்சோள செடிகள் உலர வைக்கப்பட்டு. இருப்பு வைத்து ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்த முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X