பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடு! பொங்கல் விளையாட்டு போட்டிக்கு எஸ்.பி.,...இரவு நேரங்களில் நடத்த அனுமதி கிடையாது

Added : ஜன 15, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எக்காரணத்தை முன்னிட்டும் இரவு நேரங்களில் எவ்வித கலை நிகழ்ச்சிகளோ அல்லது விளையாட்டுப் போட்டிகளோ நடத்த கண்டிப்பாக அனுமதி கிடையாது என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியும், கோலப்போட்டி, சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கிராமப்புறங்களில் அதிகளவில் போட்டிகள் நடத்தப்படும்.இதன் காரணமாக சின்னச்சின்ன அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழலும் உருவாகும். இதனைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்டத்தில் எஸ்.பி., நேரடி மேற்பார்வையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 10 டி.எஸ்.பி.,க்கள், 28 இன்ஸ்பெக்டர்கள், 150 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட போலீசார் முழுநேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் பகல் நேரங்களில் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையினரின் அனுமதி பெற்று, உரிய விளையாட்டுகளை மட்டும் நடத்த வேண்டும்.வரும் 19ம் தேதியன்று பிடாகம், சின்னகள்ளிபட்டு, பேரங்கியூர் மற்றும் அரகண்டநல்லுார் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் 26 இடங்களில் ஆற்றுத் திருவிழா நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடி திருவிழாவை கொண்டாட உள்ளதால், அனைத்து இடங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எக்காரணத்தை முன்னிட்டும் இரவு நேரங்களில் எவ்வித கலை நிகழ்ச்சிகளோ அல்லது விளையாட்டுப் போட்டிகளோ நடத்த கண்டிப்பாக அனுமதி கிடையாது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது எவ்வித ஜாதி, மத பேதமின்றி திறமைக்கு முன்னுரிமை கொடுத்து நேர்மையான முறையில் போட்டிகளை நடத்த வேண்டும் என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கோபுரம்
விழுப்புரம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் எதிரில் மற்றும் வீரவாழியம்மன் கோவில் கூட்ரோடு பகுதியில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய பஸ் நிலையம் கண்காணிப்பு கோபுரத்தில் பணியில் ஈடுபட்ட, விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், பொதுமக்கள் தங்களின் நகைகள் மற்றும் பொருட்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X